பெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு!

ஆகஸ்ட் 17, 2019 513

ஜெய்ப்பூர் (17 ஆக 2019): பெஹ்லுகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழுவை ராஜஸ்தான் அரசு நியமித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெஹ்லுகான் என்ற மாட்டு வியாபாரி பசு பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு புதன் கிழமை வெளியானது. இதில் குற்றவாளிகள் 6 பேரும் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கை திரும்ப நடத்த ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு நிதின் தீப் பிளாக்கன் தலைமையில் இயங்கும் என்றும், இந்த வழக்கின் பல கோணங்களையும் இந்த குழு விசாரிக்கும் என்றும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...