டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து!

ஆகஸ்ட் 17, 2019 335

புதுடெல்லி (17 ஆக 2019): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று எய்ம்ஸ்வ மருத்துவமனை அவசர பிரிவு விடுதிக்கு அருகிலேயே தீ ஏற்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள விடுதி நோயாளர்களும் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடப பலர் சிகிச்சை பெற்றுவரும் எய்ன்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளம் முழுவதும் தீ வேகமாக பரவியது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் பிரிவின் 22 வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...