பெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா?

ஆகஸ்ட் 18, 2019 311

புதுடெல்லி (18 ஆக 2019): என் தந்தை பெஹ்லு கானை யார் கொலை செய்தது? என்று பெஹ்லு கான் மகன் இர்ஷாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெஹ்லுகான் என்ற மாட்டு வியாபாரி பசு பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு புதன் கிழமை வெளியானது. இதில் குற்றவாளிகள் 6 பேரும் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெஹ்லு கானை கொலை செய்தது யார்? என் தந்தை தற்கொலை செய்து கொண்டாரா? என்று பெஹ்லு கான் மகன் இர்ஷாத் விரக்தியுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே பெஹ்லு கான் கொலை வழக்கில் பெஹ்லு கானுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் அக்தர் ஹுசைன், "பெஹ்லுகானை கொலை செய்தவர்களை பார்த்ததாக ரவீந்தர் என்பவரின் சாட்சியங்களை நீதிபதி ஏற்கவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...