இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆகஸ்ட் 18, 2019 283

இஸ்லாமாபாத் (18 ஆக 2019): இந்தியாவின் எந்த சவால்களையும் எதிர் கொள்ளத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த முடிவால் அந்த நாடு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து வருகிறது.

இதற்காக சீனாவுடன் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டு வந்தது. இந்த முயற்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்க வில்லை. பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷாமுகமது குரைசி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் இந்தியாவின் தாக்குதலை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் உள்ளோம். எல்லையில் போதுமான அளவுக்கு படைகளை நிறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வோம்.காஷ்மீர் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...