கேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட நடிகை!

ஆகஸ்ட் 19, 2019 400

திருவனந்தபுரம் (19 ஆக 2019): கேரள வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனது புற்று நோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளார் பிரபல நடிகை.

கேரளாவில் மழை வெள்ளத்தின் காரணமாக அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் தங்கள் பங்கிற்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை சரண்யா தனது புற்று நோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த செயலால் நடிகையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...