காஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துரோக வழக்கு!

ஆகஸ்ட் 19, 2019 507

புதுடெல்லி (19 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசை விமர்சிக்கும் மாணவிக்கு எதிராக தேச துரோக புகார் அளிக்கப் பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி மற்றும் சமூக ஆர்வலராகச் செயல்படும் ஷீலா ரஷீத், சமூக வலைதளங்களில் காஷ்மீர் குறித்தும் பாஜக அரசை எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்த ஷீலா ரஷீத்தின் பதிவுகள் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார்.

ஷீலா ரஷீத்தின் ட்விட்டர் கணக்கு லட்சக்கணக்கானோரால் பின் தொடரப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர் செய்து வருவது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும். அவரது செயல்பாடுகளை முடக்கி, கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாக ஷீலா ரஷீத்தை கைது செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...