சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது!

ஆகஸ்ட் 21, 2019 234

தானே (21 ஆக 2019): மஹாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

தானேவில் உள்ள கல்யாண் பகுதி பா.ஜ.க துணைத் தலைவராக இருப்பவர் சந்தீப் கோபிநாத். 41 வயதான இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறியதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தன்னை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சந்தீப் கோபிநாத், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.

இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான அந்த இளம்பெண் மான்பாடா காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி சந்தீப் கோபிநாத் மீது புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பா.ஜ.க பிரமுகர் மீது வன்கொடுமைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...