ட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் !

ஆகஸ்ட் 22, 2019 233

திருவனந்தபுரம் (22 ஆக 2019): கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள வெள்ள பாதிப்பிற்கு நிதி கேட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது ட்விட்டர் பக்கத்தில், வெள்ள பாதிப்பிற்கு நிதி கேட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கி கணக்கு விவரங்களையும் தமிழில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில். "சகோதர சகோதரிகளே உங்கள் அன்பிற்கும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் தலை வணங்குகிறோம்" என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...