இந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன? - உவைசி விளாசல்!

ஆகஸ்ட் 22, 2019 407

ஐதராபாத் (22 ஆக 2019): உள் நாட்டு  விவகாரத்தை மோடி ட்ரம்புடன் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை கள் வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மோடி அரசு ரத்து செய்தது. அத்துடன், மாநில அந்தஸ்தைப் பறித்து, லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக மாற்றியது.காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கை சரியல்ல; இதன்மீது சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியபோது, “காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதுதொடர்பாக யாருடனும் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்தது.ஆனால், பிரதமர் மோடி, திடீரென அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், காஷ்மீர் விவகாரம் குறித்து தொலைபேசியில் 30 நிமிடங்கள் உரையாடியதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக்கொள்கிறார் என்று டிரம்ப்பிடம் புகார் தெரிவித்ததும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.‘காஷ்மீர் உள்நாட்டு விவகாரமாக இருந்தால், பிரதமர் மோடி, டிரம்புடன் ஏன் தொலைபேசியில் பேச வேண்டும்?” என்று கேட்டுள்ள ஓவைசி, “காஷ்மீர்விவகாரம் குறித்துப் பேச டிரம்ப், என்ன சர்வதேச காவலரா? அல்லது உலகிலேயே மிகவும் வலிமையான மனிதரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...