டெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்!

ஆகஸ்ட் 22, 2019 539

புதுடெல்லி (22 ஆக 2019): காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் மட்டுமில்லாது, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட 14 கட்சிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் காஷ்மீர் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் பாசிசப் போக்கை கண்டிக்கும் அனைத்து கட்சிகளும் தி.மு.க நடத்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. இதனால், தேசிய அரசியலில் தி.மு.க முக்கியத்துவம் பெற்றுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...