ப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ஆகஸ்ட் 22, 2019 228

புதுடெல்லி (22 ஆக 2019); முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், தெற்கு டெல்லியின் ஜோர் பாஃக்கில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு 4 முறை சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அமலாக்கத்துறையினரும் வீட்டைக் கண்காணித்தனர். நேற்றிரவு வீட்டில் சுவர் ஏறி குதித்து அமலாக்கத்துறையினரால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முன் மாலையில் அவர் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...