தான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்!

ஆகஸ்ட் 22, 2019 202

புதுடெல்லி (22 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் கட்டிய சிபிஐ அலுவலகத்தில் வைத்தே விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் 2010-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது கட்டுப்பாட்டில் தான் சிபிஐ-யும் இருந்தது. அப்போது சிபிஐ-க்காக டெல்லியில் புதிய தலைமை அலுவலகத்தை கட்டி முடித்து பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து திறப்பு விழா நடத்தினார் ப.சிதம்பரம்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 26 மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அதே அலுவலகத்திற்கு அழைத்து சென்று சிபிஐ ஐந்து நாட்களூம் விசாரணை நடத்த உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...