ஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி!

ஆகஸ்ட் 23, 2019 437

புதுடெல்லி (24 ஆக 2019): 'ஹலால் செய்யப் பட்ட உணவையே வழங்குகிறோம்' என்று மெக்டோனல்ட் உணவு நிறுவனம் கூறியிருப்பதற்கு எதிராக சிலர் திடீர் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

புகழ் பெற்ற உணவு நிறுவனமான மெக்டோனல்ட் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்ட ஒருவர், " இந்தியாவில் நீங்கள் ஹலால் செய்யப் பட்ட உணவை வழங்குகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மெக்டோனல்ட் நிறுவனம், " ஆம் நாங்கள் ஹலால் செய்யப் பட்ட உணவுகளையே உலகம் எங்கு வழங்கி வருகின்றோம்." என்று பதிலளித்து இருந்தது.

இதனை விமர்சித்து சிலர். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில், ஒரு மதத்தினரை மட்டும் திருப்தி படுத்தும் விதமாக மெக்டோனல்ட் நிறுவனம் கூறியிருப்பது அதிருப்தி அளிப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் அசைவ உணவுகளை உண்ணும் போது, அது முறையாக முஸ்லிம் முறைப்படி அறுக்கப் பட்டுள்ளதா? என்பதை அறிந்தே உண்ணுவர். இதனை உறுதி செய்யும் விதமாக உலகம் எங்கும் ஹலால் சான்றிதழ் வழங்க பட்ட பின்னரே சில அசைவ உணவங்கள் உணவுகளை தயாரித்து வழங்கி வருகின்றன. இந்த ஹலால் சான்றிதழ் முறை இந்தியாவிலும் கடைபிடிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...