மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை!

ஆகஸ்ட் 24, 2019 283

ஐதராபாத் (24 ஆக 2019): தனது மகளை தொடர்ந்து வன்புணர்ந்து வந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த 53 வயது லிங்கம் குமார் என்பவர் அவரது மகளை தொடர்ந்து 2 வருடங்கள் வன்புணர்ந்து வந்துள்ளார். இது குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த சிறுமி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சிறுமி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப் பட்டார். மேலும் போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவில் ஐதராபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், லிங்கம் குமாருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...