BREAKING NEWS: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்!

ஆகஸ்ட் 24, 2019 627

புதுடெல்லி (24 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12:07 க்கு மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய பாஜக ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்து வந்த அருண் ஜெட்லி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உடல் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...