மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய அவலம்!

ஆகஸ்ட் 24, 2019 373

லக்னோ (24 ஆக 2019): உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்-சிறுமிகளுக்கு மதிய உணவில் தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி அனுராக் பட்டேலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதற்கு காரணமான ஆசிரியர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிர்வாகி ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...