மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்!

ஆகஸ்ட் 25, 2019 234

கொல்கத்தா (25 ஆக 2019): மேற்கு வங்கத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து இனி வரும் தேர்தல்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள மேற்கு வங்க தேர்தலில் பாஜகவை வளர விடாமல் தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. அதன்படி சிபிஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் சிபிஎம் தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வரவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...