ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ!

ஆகஸ்ட் 25, 2019 353

புதுடெல்லி (25 ஆக 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் ஒருவர் அழுதபடி தன் குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் நிலையைக் கண்டறிய ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சியினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து உடனே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு காஷ்மிரி பெண் ராகுல் காந்தியின் இருக்கைக்கு வந்து," காஷ்மீரில் அவரது உறவினர்கள், மற்றும் இதய நோயாளியான அவரது சகோதரர் படும் அவஸ்தைகள் குறித்து கதறி அழுதபடி விளக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...