முஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்!

ஆகஸ்ட் 25, 2019 450

ராஞ்சி (25 ஆக 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் நாசர் அன்சாரி என்ற 23 வயது இளைஞர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நாசர் அன்சரியை ராஞ்சி போலீசார் கடந்த் 4 தினங்களூக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தின் லாக்கப் கழிவறையில் நாசர் அன்சாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் நாசர் அன்சாரியின் குடும்பத்தினர் போலீசார் நாசரை கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே உள்ளூர் மூத்த அரசியல் தலைவர்கள் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...