பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்!

ஆகஸ்ட் 27, 2019 281

புதுடெல்லி (27 ஆக 2019): தெலுங்கானா மாநில பாஜக தலைவர் மகன் உதய் பிரதீப் மகன் ஸ்ரீஹர்ஷா இங்கிலாந்தில் மாயமாகியுள்ளார்.

23 வயதான ஸ்ரீஹர்ஷா இங்கிலாந்தில் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் எம்.எஸ் பயின்று வருகிறார்.

தொடர்ந்து பெற்றோரிடம் போனில் பேசி வந்த ஸ்ரீஹர்ஷா கடந்த 21 ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஸ்ரீஹர்ஷாவின் தந்தை உதய் பிரதீப் லண்டன் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி உதவுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...