சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல அனுமதி!

ஆகஸ்ட் 28, 2019 299

புதுடெல்லி (28 ஆக 2019): சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரில் தற்போது முன்னாள் முதல்வர்கள் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீருக்குள் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து அரசியல் தலைவர்கள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த வாரம் காஷ்மீர் நிலைமையை பார்வையிட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெட்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர். ஆனால் இவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து காஷ்மீரில் உள்ள உறவினர்களை மற்றும் கட்சி உறுப்பினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடுத்தார். அதேபோல் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவிகள் சிலரும் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதன் பின்னர் பிறப்பித்த உத்தரவில்,சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கிறோம். கட்சி தலைவர்கள், அரசியல் தலைவர்களை சந்திக்க தடையில்லை. ஆனால் அரசியல் நடவடிக்கைகளில் அங்கு ஈடுபடக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...