மதரஸா ஆசிரியர் அடித்துக் கொலை!

ஆகஸ்ட் 28, 2019 761

புதுடெல்லி (28 ஆக 2019): டெல்லியில் மதரஸா ஆசிரியர் ஒருவரை இருவர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

28 வயதான காரி முஹம்மது உவைஸ் வடக்கு டெல்லியில் உள்ள ஒரு செல்ஃபோன் கடையில் திங்கள் கிழமை அன்று ஹெட்போன் வாங்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு வியாபாரிகள் அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதனை அடுத்து காரி முஹம்மது உவைஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரி முஹம்மது உவைஸ் ஹெட்போன் வாங்கும்போது விலையில் முன்பின் இருந்ததாகவும் விலை அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு சமயத்திற்கு மேல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரி முஹம்மது உவைஸின் உடலை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...