முன்னாள் பாஜக அமைச்சர் - சாமியார் மீது பாலியல் புகார் கூறிய பெண் மாயம்!

ஆகஸ்ட் 28, 2019 343

லக்னோ (28 ஆக 2019): முன்னாள் பாஜக மத்திய அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூரிய சட்டக்கல்லூரி மாணவி மாயமாகியுள்ளார்.

உத்திர மாநிலம் ஷஹான்பூர் எஸ் எஸ் கல்லூரியில் சட்டம் பயிலும் அந்த மாணவி, ஒரு வீடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில் சாமி சின்மயானந்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு சாமியார் மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்டார்.இதனை பிரதமர் மோடி கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த மாணவி கடந்த நான்கு நாட்களாக மாயமாகியுள்ளதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...