பசுக்கள் அதிகமாக பால் கறக்க பாஜக எம்.எல்.ஏ சொன்ன பலே ஐடியா!

ஆகஸ்ட் 29, 2019 328

அஸ்ஸாம் (29 ஆக 2019): பசுக்கள் அதிகமாக பால் கறக்க புல்லாங்குழல் இசைத்தால் போதும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

அசாமின் சில்சார் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திலீப் குமார் பால், கண்ணன் (கடவுள் கண்ணன்) இசைத்த சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு அதிகமாக பால் கறக்கும் என்கிறார்.

மாடுகள் அதிகமாக பால் கறக்க புல், தீவனத்தை தருவார்கள். சிலர் ஹார்மோன் ஊசியைப் போட்டுக்கூட பால் கறப்பதுண்டு. இவற்றைச் செய்தால் நிச்சயம் பால் ஓரளவு அதிகமாகவே கிடைக்கும். ஆனால், பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...