மீண்டும் பணிக்கு திரும்பும் எண்ணம் இல்லை - ஐ.ஏ.எஸ் அதிகாரி மறுப்பு!

ஆகஸ்ட் 29, 2019 241

திருச்சூர் (29 ஆக 2019): மீண்டும் பணிக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்று காஷ்மீருக்காக பணியை துறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை எதிர்த்து அம்மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விதமாக கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2012- ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜியில் இந்தியா அளவில் 59 ஆவது இடம் பிடித்த கண்ணன் கோபிநாத் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை செயலாளராக இருந்தார். அவர் கடந்த 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால் அவரை மீண்டும் பணிக்கு திரும்ப நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்துள்ள கண்ணன் கோபிநாதன், "மக்களுக்காக குரல் கொடுக்க பணியில் சேர்ந்தேன் ஆனால் என் சொந்த கருத்தையே என்னால் கூற முடியவில்லை. மீண்டும் வேலையில் அமர வாய்ப்பில்லை. எனது முடிவு நான் இழந்த சுதந்திரத்தை திரும்பவும் வழங்கும் என நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...