இரத்தப் பரிசோதனையில் தவறான ரிசல்ட் - அதிர்ச்சியில் பெண் மரணம்!

ஆகஸ்ட் 29, 2019 251

சிம்லா (29 ஆக 2019): இரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பெண் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

சிம்லாவில் ஒரு பெண் தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றார். அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப் பட்டது. இதன் ரிசல்ட்டை பார்த்த டாக்டர் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார்.

ஆனால் அவரது எய்ட்ஸ் இருப்பதாக கூறீய அவரது இரத்தத்தை அரசு மருத்துவமனை பரிசோதனை கூடடத்தில் மீண்டும் பரிசோதனை செய்ததில் எய்ட்ஸ் இல்லை என்பது உறுதியானது.

இதனை அடுத்து தவறான ரிப்போர்ட் கொடுத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...