ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் - ஜாமீன் கிடைக்குமா?

ஆகஸ்ட் 30, 2019 227

புதுடெல்லி (30 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படவுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை மொத்தம் 10 நாட்கள் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிகிறது. இதையடுத்து ப. சிதம்பரம் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் செய்கிறார்கள். ஐஎன்எக்ஸ் வழக்கில் மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...