பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு சென்னையிலிருந்து மிரட்டல்!

ஆகஸ்ட் 30, 2019 625

சென்னை (30 ஆக 2019): பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம் வக்பு வாரியம் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு சென்னையை சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாபர் மசூதி வழக்கில் விசாரணையில் வக்ஃபு வாரியத்திற்காக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிட்டுவருகிறார். இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இஸ்லாமிய மனுதார்களுக்காக தொடர்ந்து வாதாடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஒரு நபர் தனது மனசாட்சியை அடமானம் வைத்து ராமனை எதிர்த்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக எவ்வாறு வாதிட முடியும்? இந்துக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நான் இதுவரை என் வாயால் காயத்ரி மந்திரத்தை 50 லட்சம் முறை உச்சரித்துள்ளேன். அந்த வாயால் உங்களை நான் சபிக்கிறேன்'' என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் சண்முகம்.

இதனைத் தொடர்ந்து இது போன்று மிரட்டுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்று குறிப்பிட்டு சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜிவ் தவான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரும் வாட்ஸ் ஆப் மூலம் தன்னை மிரட்டியதாகவும் தவான் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...