மாட்டுக்கறிக்காக படுகொலை - தூக்குத் தண்டனை மசோதா நிறைவேறியது!

ஆகஸ்ட் 31, 2019 749

கொல்கத்தா (31 ஆக 2019): மாட்டுக்கறி உள்ளிட்டவைகளுக்காக நடத்தப்படும் படுகொலைகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.

மாட்டுக்கறிக்காகவோ மற்ற எந்த காரணங்களுக்காகவோ தாக்குதலில் ஈடுபட்டு பாதிக்கப் பட்டவர் உயிரிழந்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் மசோதா மேற்கு வங்க அரசு நேற்று நிறைவேற்றியது.

மேலும் இந்த் மசோதா மூலம் தாக்குதலில் ஈடுபட்டு பாதிக்கப் பட்டவர் படுகாயம் அடைந்தால் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படும்.

இதுகுறித்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசும் இதுபோன்ற சட்டங்களை இயற்றி கும்பல் கொலைகளை தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...