முஸ்லிம்கள் இல்லாத ஊரில் மசூதியை பாதுகாக்கும் இந்துக்கள்!

ஆகஸ்ட் 31, 2019 589

பாட்னா (31 ஆக 2019): அமைதிக்கும், மத ஒற்றுமைக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது பீகாரில் ஒரு கிராமம்.

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் மாரி கிராமத்தில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மசூதி ஒன்று இன்று வரை உள்ளது. 1947 ல் இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப் பட்டபோது அந்த கிராமத்தில் வசித்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆனால் அங்குள்ள மசூதியை அப்பகுதி இந்துக்கள் இன்று வரை பராமரித்து வருகின்றனர். ஐந்து வேளையும் பென்டிரரைவ் மூலம் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு அந்த மசூதியில் ஒலிக்கப் படுகிறது. பெயிண்டிங், மராமத்து வேலைகளை அப்பகுதி இந்துக்கள் அந்த மசூதிக்கு செய்து வருகின்றனர்.

ஆனால் ஒருவர் கூட அந்த மசூதியை இடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த இந்து ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...