லாலுபிரசாத் யாதவ் உடல் நிலை கவலைக்கிடம்!

செப்டம்பர் 01, 2019 339

பாட்னா (01 செப் 2019): பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலுபிரசாத் யாதவுக்கு, சிறையில் இருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் , கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் லாலுவின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பி.கே.ஜா கூறுகையில், லாலுவின் சிறுநீரகம் 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...