எல்லாமே தவறாக வழிநடத்தப் படுகிறது - மன்மோகன் சிங் விளாசல்!

செப்டம்பர் 01, 2019 381

புதுடெல்லி (01 செப் 2019): மோடி அரசு பழிவாங்கல் கொள்கையை விட்டு, வீழ்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. பழி வாங்கும் அரசியலை கைவிட்டு விட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்துநாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான நிர்வாகத் திறன்தான் பொருளாதார மந்த நிலைக்கு காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்திருப்பது என்பது, நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

உற்பத்தி துறை வளர்ச்சி 0.6 சதவீதம். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை காட்டுகிறது. பொருளாதார மந்தநிலை இனியும் தொடரக்கூடாது" இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...