கேரள ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிஃப் முஹம்மது கான் நியமனம்!

செப்டம்பர் 01, 2019 378

திருவனந்தபுரம் (01 செப் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிஃப் முஹம்மது கான் கேரள கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில், முன்னாள் மத்திய அமைச்சராக ஆரிஃப் முஹம்மது கான் காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டவராவார். பின்பு ஜனதா தளத்தில் இணைந்தார். அதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது ஆரிஃப் முஹம்மது கானை கேரள ஆளுநராக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...