14 வயது தலித் சிறுமி கொடூர கொலை!

செப்டம்பர் 02, 2019 373

ஜலான் (02 செப் 2019): உத்திர பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் ஜலான் மாவட்டம் அடா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலை தொடர்பாக சனிக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் உடல் ஞாயிறு காலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடையதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே எதுவும் கூற முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...