பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செப்டம்பர் 02, 2019 435

புதுடெல்லி (02 செப் 2019): பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பாஜக முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்தின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக முன்னாள் அமைச்சரான சின்மயானந்த், மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சின்மயனாந்த் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பெண்களை அவர் சீரழித்துள்ளார் என்று அப்பெண் கூறியிருந்தார். மேலும் தனக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து, அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சின்மயனாந்த் மீது கடந்த மாதம் 27-ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டக்கல்லூரி மாணவி அளித்த 2 புகார்களையும் விசாரணை செய்வதற்கு ஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அதில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்த குழுவின் விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...