உத்திர பிரதேச அரசின் அவலங்களை வெளியிட்ட செய்தியாளர் மீது கிரிமினல் வழக்கு!

செப்டம்பர் 03, 2019 386

லக்னோ (03 செப் 2019): உத்திர பிரதேசத்தில் உப்பைத் தொட்டுக்கொண்டு சப்பாத்தி சாப்பிட்டதை வீடியோவாக எடுத்து பகிர்ந்த பத்திரிகையாளர் மீது இரண்டு பிரிவுகளில் உத்தரப்பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவாக தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பள்ளி வளாகத்தில் அமர்ந்து சப்பாத்தியை உப்பில் தொட்டுக்கொண்டு மாணவர்கள் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உத்தரப்பிரதேச அவரை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப் பட்டியலில் பருப்பு சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாட்களில் மாணவர்களுக்கு ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும், சில நாட்களில் சாதமும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் தான் அளிக்கப்படுகிறது. யாராவது முக்கிய பிரமுகர்கள் வந்தால் மட்டும் குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது” என்று பெற்றோர்கள் கூறினர்.

இந்த நிலையில், மாணவர்கள் சப்பாத்தியும், உப்பும் சாப்பிட்டதை வீடியோ பதிவு செய்த பவான் ஜெஷ்வால் பத்திரிகையாளர் மீது மாநில அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...