மேதா பட்கரின் உண்ணாவிரதப் போராட்டம் - உடல் நிலை மோசமடைவதாக தகவல்!

செப்டம்பர் 03, 2019 420

போபால் (03 செப் 2019): தொடர்ந்து 9 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரின் உடல் நிலை மோசம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பர்வானி மாவட்டம் குஜராத் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்

மேதா பட்கருடன் இணைந்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் சுழற்சி முறையில் போரட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை குஜராத் அரசு உயர்த்தினால் ம.பியில் உள்ள 192 கிராமங்கள் பாதிக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ம.பி.முதல்வர் மேதா பட்கரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. சர்தார் சரோவர் அணை விவகாரத்தில் குஜராத் அரசிடம் இருந்து உறுதி வந்தால் மட்டுமே தனது பட்டினிப்போராட்டத்தை முடிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் மேதா பட்கர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...