சுற்றுலா தலமாகும் மோடியின் டீ கடை!

செப்டம்பர் 03, 2019 196

வந்நகர் (03 செப் 2019): பிரதமர் மோடி டீ விற்றதாக கூறப்படும் வத்நகர் பகுதி டீ கடையை சுற்றுலாத்தலமாக மாற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் சமீபத்தில் குஜராத்திற்கு சென்றிருந்தார். அப்போது, வத் நகரில் பிரதமர் மோடி நடத்திய டீக்கடையைப் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து அந்தக் கடையைச் சுற்றுலாத்தளமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டீக்கடை சுற்றிலும் கண்ணாடியால் மூடப்படும் என்றும், மாற்றம் ஏதும் செய்யாமல் கடையை அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வத்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் தான் மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது தந்தையுடன் இணைந்து சிறு வயதில் மோடியும் டீ விற்பனை செய்து கடையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...