காங்கிரஸ் தலைவர் கைதால் எடியூரப்பா அதிருப்தி - அதிர்ச்சியில் பாஜக!

செப்டம்பர் 04, 2019 543

பெங்களூரு (04 செப் 2019): கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் தனக்கு சந்தோஷம் இல்லை என்று அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான, பி.எஸ்.எடியூரப்பா கூறிய கருத்து அந்த கட்சி தலைவர்களையே, திடுக்கிட வைத்துள்ளது.

பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், "டி.கே.சிவகுமாரின் கைது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். சிவகுமார் விடுதலையாகும் செய்தியறிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சிதான் அடைவேன்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எடியூரப்பா, இவ்வாறு கூறியுள்ள கருத்து, பாஜகவினருக்குள்ளேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...