பாபர் மசூதி மனுதாரர் இக்பால் அன்சாரி மீது தாக்குதல்!

செப்டம்பர் 04, 2019 433

அயோத்தியா (04 செப் 2019): பாபர் மசூதிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இக்பால் அன்சாரி என்பவர் மீது தக்குதல் தொடுக்கப் பட்டுள்ளது.

வர்திகா சிங் என்ற தேசிய அளவிளான துப்பாக்கிச் சுடும் சாம்பியன் செவ்வாய்க்கிழமை அன்று இக்பால் அன்சாரி வீட்டுக்குள் நுழைந்து திடீரென பாபர் மசூதி வழக்கி திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முத்தலாக் குறித்தும் பேசியுள்ளார்.

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர் இக்பால் அன்சாரியை தாக்க தொடங்கியுள்ளார். உடனே இக்பால் அன்சாரியின் பாதுகாவலர்கள் வர்திகா சிங்கை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து இதுகுறித்து இக்பால் அன்சாரி அளித்த புகாரின் அடிப்படையில் வர்திகா சிங் மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...