கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி!

செப்டம்பர் 04, 2019 178

குருகிராம் (04 செப் 2019): மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து ஏழாம் மாதமாக தனது வீழ்ச்சியை சந்தித்து வருவதால் இரண்டு நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் அரியானாவில் உள்ள குருகிராம் மானேசரில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பேசஞ்சர் ரக வாகன உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் சரிந்துள்ளது.

2018 ஆகஸ்ட் மாதத்தில் ஆல்டோ, புது வேகன் ஆர், செலேரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 1,22,824 ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை சரிந்து 80,909 ஆக உள்ளது.

யூவி ரக வாகனங்களான ப்ரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-க்ராஸ் போன்ற கார்கள் 34.85 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விற்பனை இல்லாத காரணத்தாலே தொடர்ந்து தனது உற்பத்தியையும் மாருதி சுசூகி குறைத்துக்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...