அமித்ஷாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை!

செப்டம்பர் 04, 2019 337

புதுடெல்லி (04 செப் 2019): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு , கழுத்து பகுதியில் உள்ள கட்டியை அகற்றும் பொருட்டு சிறிய ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமித் ஷாவுக்கு, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் கழுத்து பகுதியில் கட்டியை அகற்றுவதற்கான ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து இந்த ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமித்ஷாவுக்கு மேற்கொண்ட ஆப்பரேஷன் லிப்போமா என்ற கட்டியாகும். இது தோலுக்கு அடியில், கொழுப்பு செல்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி ஆகும். சிலசமயங்களில் இந்த கட்டியினால் எரிச்சல் ஏற்படலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...