விநாயகர் ஊர்வலத்தில் விபத்து - காப்பாற்றிய முஸ்லிம்கள்!

செப்டம்பர் 05, 2019 415

சூரத் (05 செப் 2019): குஜராத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானவர்களை முஸ்லிம்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இவ்வருடமும் வழக்கம்போல் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஆதர்ஷ் அங்காடி தெரு வழியே ஊர்வலம் சென்றபோது மிகவும் உயரமான விநாயகர் சிலை மின் கம்பியில் பட்டு எதிர் பாராத விதமாக ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் ஊர்வலத்தில் சென்ற பலர் சுருண்டு விழுந்தனர். இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

விபரம் அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப் பட்டவர்களை மீட்டு ஜெயாபன் மோடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...