கொலைகார கும்பல் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம்!

செப்டம்பர் 05, 2019 539

கொல்கத்தா (05 செப் 2019): மேற்கு வங்கத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் லால்பேக் பகுதியில் ஏழுபேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் 32 வயது கபீர் சேக் என்பவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். எனினும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

கும்பல் தாக்குதலில் உயிரிழந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு சட்டம் இயற்றிய அடுத்த வாரமே இச்சம்பவம் அரங்கேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...