அபராதத்தைக் கேட்டு ஆவேசம் அடைந்த இளைஞர் போலீஸ் முன்பு பைக்குக்கு தீ வைத்த கொடுமை!

செப்டம்பர் 06, 2019 359

புதுடெல்லி (06 செப் 2019): போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், நேற்று ஒருவருக்கு விதியை மீறியதால் போக்குவரத்து போலீசார் ரூ 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...