ஆம் ஆத்மியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ காங்கிரஸில் இணைவு!

செப்டம்பர் 07, 2019 273

புதுடெல்லி (07 செப் 2019): ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏ அல்கா லம்பா காங்கிரஸில் இணைந்தார்.

ஆல்கா லம்பா டெல்லியின் சாந்தினி சவுக் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகளுடன் நீண்ட காலமாக மனக்கசப்பில் இருந்து வருகிறார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலின் போது கூட அவர் பிரச்சாரங்களுக்கு செல்ல மறுத்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் வாகனத்திற்கு பின்னால் நடந்து வருமாறு கூறியதால் பிரச்சார கூட்டங்களில் ஆல்கா லம்பா கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறாக ஆம் ஆத்மியுடன் விரிசலில் இருந்து வந்த ஆல்கா லம்பா கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதால் ஆல்கா லம்பா விரைவில் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், ஆல்கா லம்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆம் ஆத்மிக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கடந்த 6 ஆண்டு பயனம் பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளது, அனைத்திற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தமது ராஜினாமாவை ஏற்கும்படி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...