தெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்!

செப்டம்பர் 08, 2019 223

ஐதராபாத் (08 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரரான் அவர்களை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...