மசூதி இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை!

செப்டம்பர் 09, 2019 1661

மொஹாலி (09 செப் 2019): ஹரியானாவில் மசூதியில் தொழுகை வைக்கும் இளம் இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் மஜ்ரி என்ற பகுதியில் உள்ள மசூதியின் இமாம் 38 வயது இர்ஃபான் மற்றும் அவரது மனைவி யாஸ்மீன் ஆகியோர் மசூதியின் ஒரு பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தொழுகைக்கு சென்றவர்கள் இருவரும் படுகொலை செய்யப் பட்டுக் கிடந்ததை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மசூதி சுவர் தொடர்பான பிரச்சனையில் சனிக்கிழமை அன்று மாலை இரு தரப்பாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இமாமுக்கு ஒரு தரப்பார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மிரட்டல் விடுத்தவர்கள் இமாமையும் அவரது மனைவியையும் கொலை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...