கணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு!

செப்டம்பர் 09, 2019 498

லக்னோ (09 செப் 2019): உத்திர பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், டாக்டரை பார்ப்பதற்காக தனது கணவருடன் பிஜ்னோருக்கு சென்றார். பின்னர் ரிக் ஷாவில் வீடு திரும்பினார். அப்போது 4 பேர் கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது ரிக் ஷாவை வழி மறித்து கணவரை தாக்கி மிரட்டிய அந்த கும்பல் ரிக் ஷாவில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கதறினார். அவரது கணவர் கும்பலை தடுக்க முயன்றார். ஆவேச மடைந்த கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அந்த கும்பல் கணவர் கண் முன்பே துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணை கற்பழித்தனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...