குடும்பத்தினர் மூலம் ப சிதம்பரம் வெளியிட்ட்டுள்ள பரபரப்பு ட்வீட்!

செப்டம்பர் 09, 2019 512

சென்னை (09 செப் 2019): திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு. செப்.,19 வரை அவருக்கு சிறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கோரிக்கையின் பேரில் தனது குடும்பத்தினர் கருத்து வெளியிடுவதாக குறிப்பிட்டு, சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அதில், " ஐஎக்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டும், பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எல்லாம் கைது செய்யப்படாமல், நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்? கடைசி கையெழுத்திட்டதால் மட்டும் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

அதிகாரிகள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே யாரும் கைது செய்யப்படவேண்டும் என நான் கருதவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். சிதம்பரத்தின் இந்த ட்வீட், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவர் கையொப்பமிட்டதாகவும் அதிகாரிகள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதைக் காட்டுவதாகவும் சமூகவலைதளத்தில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...